தாய்மாமன் சீராக தங்க மோதிரம்: இதுவரை 11,500க்கும் மேற்பட்ட பயனாளிகள் தேர்வு!

Estimated read time 1 min read

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, தாய்மாமன் சீராக, தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாளான செப். 15ம் தேதி துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தில் பயன் பெற தாய்மார்கள் விண்ணப்பிக்க தேவையில்லை. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகள் குறித்த விவரம் திரட்டப்படுகிறது. கர்ப்பிணிகளிடம் ஆதார், ஸ்மார்ட் கார்டு, பிக்மி எண், தாயின் வங்கி கணக்கு விவரம் பெறப்படுகிறது.

மருத்துவமனை தரப்பில் வழங்கப்படும், டிஸ்சார்ஜ் விவரம் இணைத்து, தயாராக வைத்திருக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் மட்டும் மாதந்தோறும் 500 – 550 பிரசவங்கள் நடக்கின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களையும் சேர்த்தால் நேற்று வரை 11,500க்கு மேற்பட்டோர் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், ‘திட்டம் துவங்கும் நாளில், தகுதியானவர்களுக்கு அழைப்பு வரும். தினசரி குழந்தைகள் பிறப்பதால், பயனாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது’ என்றனர்.

You May Also Like

More From Author