இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

Estimated read time 1 min read

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் குழுவினர் சாமி தரிசனம் செய்தனர்.

வரும் 4-ம் தேதி அதிகாலை 2.55 மணிக்கு ஜிஎஸ்எல்வி-17 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில், இஸ்ரோ தலைவர் மற்றும் குழுவினர் திருப்பதி கோயிலில் தரிசனம் மேற்கொண்டனர்.

அவர்களுக்கு வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன், இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை என்றும், செயற்கைக்கோள்கள் அதிகம் தேவைப்படுவதால் தனியாரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளில் 60-க்கும் மேற்பட்ட ஏவுதல்கள் வெற்றி பெற்றுள்ளதாகவும், தோல்வியடைந்த 4 ராக்கெட்டுகள் குறித்து பரிசீலனை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author