ஆவடியில் 24 மணி நேரமும் குடிநீர் திட்டம்: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு  

Estimated read time 0 min read

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் உரை நிகழ்த்திய முதலமைச்சர் விஜய், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக மாநிலத்தின் பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் குடிநீர் மேம்பாட்டு திட்டங்களை அறிவித்தார்.
வடசென்னை, ஆவடி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மீஞ்சூரில் நாளொன்றிற்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் ரூ. 4,800 கோடி செலவில் அமைக்கப்படும்.
மேலும், ஆவடி மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் தடையின்றி முழுமையாகக் குடிநீர் வழங்கும் நோக்கில் ரூ. 500 கோடி மதிப்பில் புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை உயர்த்த ரூ. 410 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author