மனிதர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் சக மனிதர்களுடன் பேசும் வார்த்தைகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளை விட கணிசமாகக் குறைந்து வருகிறது.
அரிசோனா பல்கலைக்கழக உளவியல் ஆய்வாளர்கள் நடத்திய விரிவான ஆராய்ச்சியில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
2005 முதல் 2019 வரையிலான 15 ஆண்டுகளில், ஒரு மனிதன் தினமும் பேசும் சராசரி வார்த்தைகளின் எண்ணிக்கையில் 28 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதாவது ஒவ்வொரு ஆண்டும் மனிதர்கள் பேசும் சொற்களின் அளவு சராசரியாக 338 வார்த்தைகள் வரை குறைந்து கொண்டே வருகிறது.
மனிதர்கள் பேசுவது குறைந்து வருகிறது: அதிர்ச்சி தரும் அறிவியல் ஆய்வு முடிவுகள்; ஸ்மார்ட்போனைத் தாண்டிய அதிர்ச்சி முடிவுகள்
