காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் சீனாவின் சாதனைகள்

சீன சூழலியல் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் துணைத் தலைவர் லீ காவ் 21ஆம் நாளில், சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில், காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் சீனா மாபெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது. சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த பசுமையான, குறைந்த கார்பான் வளர்ச்சிப் பாதையை சீனா தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது என்று தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்துக்கான சீனாவின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் பற்றிய 2026ஆம் ஆண்டு அறிக்கை இச்செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. இதன்படி, 2025ஆம் ஆண்டில், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு அலகுக்கான கரியமில வாயு உமிழ்வு, 2020ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 17.7 விழுக்காடு குறைந்துள்ளது. புதைபடிவமற்ற எரியாற்றல் நுகர்வு, மொத்த எரியாற்றல் நுகர்வு அளவில் 21.7 விழுக்காடு வகித்துள்ளது. காற்று மற்றும் சூரிய ஆற்றல் மின்சார உற்பத்தி சாதனங்களின் மொத்த ஆற்றல் 184 கோடி கிலோவாட்டாகும். காட்டு இருப்பு அளவு 2098 கோடியே 80 இலட்சம் கன மீட்டரை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author