சிட்சாங்கின் கிர்லோங் வட்டத்தில் செய்திகளை வெளியிட்ட பன்னாட்டுச் செய்தியாளர்கள்

Estimated read time 0 min read

செப்டெம்பர் 5ஆம், 6ஆம் நாட்களில், சீன அரசவை செய்தி அலுவலகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் ஏற்பாட்டில், அமெரிக்கா, பிரிட்டின், ரஷியா, இந்தியா, பாகிஸ்தான், பிரேசில், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் கிர்லோங் வட்டத்துக்குச் சென்று செய்திகளை வெளியிட்டனர்.

இந்திய பி.டி.ஐ. செய்தியாளர் வர்மா செய்தியை வெளியிடுகையில், இத்தகைய சீற்றத்தைக் கையாள்வதில் சீனா வலுவான ஆற்றலைக் கொண்டுள்ளது. சிறப்புப் பயிற்சியைப் பெற்ற அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் உள்ளனர். மீட்புதவிக்கான சிறப்பு இயந்திர சாதனங்களும் உள்ளன. மீட்புதவிப் பணியில் பங்கெடுத்த பணியாளர்களுக்கு மரியாதை வழங்க வேண்டும். அவர்களின் முயற்சி நம்மை மனமுருகச் செய்கின்றது என்றார்.

You May Also Like

More From Author