பல்கேரியாவின் புகழ்பெற்ற ஞானி, குறிசொல்லி பாபா வங்கா, 2027-ஆம் ஆண்டிற்காக கணித்துள்ள புதிய தீர்க்கதரிசன விவரங்கள் வெளியாகியுள்ளன.
அவரது ஆதரவாளர்களின் கூற்றுப்படி, 2027-இல் நிகழும் ஒரு விசித்திர நோய் அல்லது மரபியல் சோதனை மூலம் மனிதர்களில் சிலருக்கு அசாத்தியமான சூப்பர் ஹியூமன் சக்திகள் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் புனைகதை திரைப்படம் போல தோன்றும் இக்கணிப்பில், ஒரு மர்ம நோய் அல்லது ஆய்வகச் சோதனையானது ஒரு குறிப்பிட்ட மனித குழுவை பாதிக்கும் என்றும், அதில் ஒரு சிலருக்கு மட்டும் மனித வரம்புகளை தாண்டிய அமானுஷ்ய சக்திகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த சக்திகள் என்ன வகையானவை என்பது குறித்தோ அல்லது அது எவ்வாறு நிகழும் என்பது குறித்தோ விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
பாபா வங்கா கணிப்பு 2027: சூப்பர் ஹியூமன்களை உருவாக்கப் போகும் விசித்திர நோய்?
