கப்பல் கட்டுமான ஆலையில் ஒரு சரக்கு கப்பலில் தீ விபத்து

ஷான்தோங் மாநிலத்திலுள்ள பெய்காய் கப்பல் கட்டுமான ஆலையில் செப்பனிடுவதற்காக துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்து ஒரு வெளிநாட்டுச் சரக்குக் கப்பலில் 10ஆம் நாள் காலை 11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பெரும் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நிவாரணப் பணியை விரைந்து மேற்கொண்டு விபத்தில் காணாமல் போனவர்களைக் கூடிய விரைவில் மீட்டெடுக்க வேண்டும் என்றும், இவ்விபத்துக்கான காரணத்தை விரைவில் கண்டறிந்து விபத்துக்குப் பொறுப்புள்ளவர்களின் மீது சட்டப்படி தண்டனை விதிக்க வேண்டும் என்றும் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் கட்டளையிட்டார்.

சீன அவசரநிலை மேலாண்மை அமைச்சகத்தின் பணிக் குழு விபத்து நிகழ்ந்த இடத்துக்கு விரைந்துள்ளது. பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணி சுறுசுறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

You May Also Like

More From Author