உலகளாவிய தெற்கு பகுதியின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை வழிநடத்தும் பெரிய பிரிக்ஸ் ஒத்துழைப்பு

Estimated read time 0 min read

வேகமாக மாறி வரும் உலகில் தற்போது நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. சர்வதேச ஒழுங்கு நியாயமான திசை நோக்கி வளரவும், மனிதகுலத்துக்கான பொது எதிர்கால சமூகத்தை கூட்டாக கட்டமைக்கவும் உலகளாவிய தெற்கு பகுதியின் முன்னணியிலுள்ள பிரிக்ஸ் நாடுகள் எப்படி செயல்பட வேண்டும் என்பது ஒரு கேள்வி.

18ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாடு செப்டம்பர் 12, 13 ஆகிய நாட்களில் இந்தியாவின் புதுதில்லியில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இம்மாநாட்டின் முதல் மற்றும் 2ஆவது கட்ட கூட்டங்களில் பங்கேற்று முக்கிய உரை நிகழ்த்தினார். புத்தாக்க வளர்ச்சியை முன்னேற்றுவது, அமைதி மற்றும் நிலைத்தன்மயைப் பேணிக்காப்பது, நாகரிகங்களிடையே பரஸ்பர கற்றலை மேம்படுத்துவது, உலகளாவிய ஆளுகையைச் சீர்திருத்துவது ஆகிய 4 துறைகளில் பிரிக்ஸ் நாடுகள் முன்னோடியாக செயல்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். பிரிக்ஸ் ஒத்துழைப்புக்கு இது வரலாற்று கடமையையும் முன்னேற்றத் திசையையும் தெளிவுப்படுத்தியதோடு, இந்த ஒத்துழைப்பின் உத்திநோக்கு தகுநிலையையும் உயர்த்தியுள்ளது.

உலகளாவிய தெற்கு பகுதியின் கூட்டு எழுச்சி, உலகின் நிலைமை மாற்றத்துக்குத் தெளிவான அடையாளமாகும். உலகளாவிய தெற்கு பகுதியின் ஆற்றலை வலுப்படுத்துவதற்காக, சர்வதேச சட்ட ஆட்சியை கூட்டாக பேணிக்காப்பது, பலதரப்புவாதத்தை ஆதரிப்பது, மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சிச் சிந்தனையைப் பின்பற்றுவது, பாதுகாப்பு ஆளுகையைக் கூட்டாக மேம்படுத்துவது ஆகிய கருத்துக்களை ஷி ச்சின்பிங் முன்வைத்தார். இது, சர்வதேச விவகாரங்களில் உலகளாவிய தெற்கு பகுதியின் செல்வாக்கு மற்றும் கருத்து வெளிப்பாட்டு உரிமையை உயர்த்துவதற்கு பயனுள்ள வழிகளை வழங்கியுள்ளது.

மேலும், ஏஐ திறப்பு மூல பகிர்வு, வர்த்தகம் மற்றும் முதலீட்டின் வசதிமயமாக்கம், டிஜிட்டல் தொழில் ஒத்துழைப்பு, நுண்ணறிவார்ந்த உற்பத்தி ஒத்துழைப்பு, அறிவியல் தொழில்நுட்ப திறன் பயிற்சி ஆகிய 5 முன்மொழிவுகளை ஷிச்சின்பிங் வழங்கினார். இது, பெரிய பிரிக்ஸ் ஒத்துழைப்புக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கியதோடு, உலகளாவிய தெற்கு பகுதியின் ஒற்றுமை மற்றும் சுய வலிமைக்கும் ஆதரவளித்துள்ளது.

அடுத்த ஆண்டில், பிரிக்ஸ் அமைப்பு 4ஆவது சீன ஆண்டை வரவேற்க உள்ளது. சீனாவின் தலைமையில் பெரிய பிரிக்ஸ் ஒத்துழைப்பு நிலையாகவும் சீராகவும் முன்னேற முடியும் என்பதை சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறது. பிரிக்ஸ் ஒத்துழைப்பின் 3ஆவது பொன் காலம் தொடங்க உள்ள நிலையில், பிரிக்ஸ் உறுப்பினர்களுடன் இணைந்து, பெரிய பிரிக்ஸ் ஒத்துழைப்புக்கு புதிய சிறந்த சூழ்நிலையை உருவாக்கவும் கூடுதலாகப் பங்காற்றவும் சீனா விரும்புகிறது.

You May Also Like

More From Author