சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்ட வரைவு மற்றும் அரசு பணியறிக்கை பற்றிய விவாதம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு பிப்ரவரி 27ம் நாள் கூட்டம் நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். இதில், பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் வரைவு, அரசு பணியறிக்கை ஆகியவை விவாதிக்கப்பட்டன. சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடரில் அவை பரிசீலனை செய்யப்படும்.

15ஆவது ஐந்தாண்டு திட்டக் காலம் என்பது சோஷலிச நவீனமயமாக்கத்தை அடிப்படையில் நனவாக்குவதற்குரிய அடிப்படையை இட்டு அதற்கு முழு முயற்சி மேற்கொள்ளும் முக்கியக் காலமாகும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஆக்கப்பூர்வமான நிதிக் கொள்கை மற்றும் மிதமான தளர்ச்சியான நாணயக் கொள்கையைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

You May Also Like

More From Author