“இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த தமிழ்நாட்டுப் பெண்” சர்வதேச போட்டியில் 3-வது இடம் பிடித்து ஜெகதீஸ்ரீ குமரேசன் அசத்தல்….!! 

Estimated read time 1 min read

தாய்லாந்தில் நடைபெற்ற FIM Asia Cup of Circuit Racing சர்வதேச மோட்டார் சைக்கிள் பந்தயப் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த வீராங்கனை ஜெகதீஸ்ரீ குமரேசன் 3-வது இடம் பிடித்துப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச அளவில் நடைபெற்ற இந்தப் புகழ்பெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் இந்திய நாட்டின் சார்பில் களமிறங்கிய சென்னையைச் சேர்ந்த ஜெகதீஸ்ரீ குமரேசன், தனது அபாரமான திறமையாலும் வேகத்தாலும் மற்ற நாட்டின் போட்டியாளர்களுக்குச் சவால் அளித்து மூன்றாம் இடத்தைக் கைப்பற்றிப் பதக்கம் வென்றார்.

சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் அளப்பரிய பெருமை சேர்த்துள்ள மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனை ஜெகதீஸ்ரீ குமரேசனுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைத்து வரும் தமிழகப் பெண்களுக்கு இவரது வெற்றி மிகப்பெரிய ஊக்க காரணியாக அமைந்துள்ளது எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

You May Also Like

More From Author