இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற முதலாவது பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், நேபாள அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம், இந்தியா தனது முதல் மகளிர் கண்பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றியதுடன், தொடர் முழுவதும் தோல்வியே அடையாத அணியாகவும் ஆதிக்கம் செலுத்தியது.
டாஸில் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்த இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அபாரமாகச் செயல்பட்டு, நேபாள அணியை 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 114 ரன்கள் எடுக்க மட்டுமே அனுமதித்தனர்.
இந்திய அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு மற்றும் துல்லியமான ஃபீல்டிங், வெற்றிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தது.
பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பையை வென்று இந்தியா சாதனை
