ராட்சத பாண்டா குறித்து சீன-அமெரிக்க புதிய ஒத்துழைப்பு

சீனாவின் செங்டு நகரிலுள்ள ராட்சத பாண்டா வளர்ப்பு மற்றும் ஆய்வு தளத்தில் இருந்து பிங் பிங் மற்றும் ஃபூ ஷுவங் என்ற இரண்டு ராட்சத பாண்டாக்கள், விரைவில் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள விலங்கியல் பூங்காவுக்கு அனுப்பப்பட உள்ளது என்று சீன தேசிய காடு மற்றும் புல்வெளி பணியகம் அண்மையில் தெரிவித்தது. சீன-அட்லாண்டா விலங்கியல் பூங்காவின் ராட்சத பாண்டா பாதுகாப்பு ஒத்துழைப்பு,ஏற்கெனவே 25 ஆண்டு கால வரலாறு உடையது. இந்த ஒத்துழைப்புக்காக, பிங் பிங் மற்றும் ஃபூ ஷுவங் பாண்டாக்கள், அமெரிக்காவில் 10 ஆண்டுகள் தங்கவுள்ளன. ராட்சத பாண்டா வளர்ப்பு மற்றும் இனப்பெருக்கம், நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை, அறிவியல் ஆய்வு, பொது கல்வி முதலிய துறைகள் குறித்து இரு தரப்புகள், மேலதிக ஆழ்ந்த பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

You May Also Like

More From Author