2026 நாகரிகங்களிடையே பரஸ்பர கற்றலுக்கான சர்வதேச கருத்தரங்கு 9ஆம் நாள் சீனாவின் மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தில் துவங்கியது. உலகின் 20க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 300 அரசு வாரியப் பிரதிநிதிகளும், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும், நிபுணர்களும் அறிஞர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். அவர்கள் இக்கருத்தரங்கில் நடத்தப்பட்ட சுமார் 40 சிறப்புச் சொற்பொழிவுகள் மற்றும் பரிமாற்ற நிகழ்ச்சிகளில் நாகரிகங்களிடையே உள்ள பரஸ்பர கற்றல் மற்றும் வளர்ச்சி குறித்து விவாதித்துள்ளனர்.
சீனா மற்றும் போர்த்துகீசியம் பேசும் நாடுகளிடையே நாகரிக தொடர்பு, ஏஐ காலத்தின் நாகரிக சிறப்பு உள்ளிட்ட கருப்பொருட்களைக் கொண்ட கிளைக் கருத்தரங்குகளும் அதன் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் விருந்தினர்கள் பரிமாற்றம் மேற்கொண்டுள்ளனர்.
