வில்வித்தையில் இந்தியா தங்கம் வென்று அசத்தல்…!!

Estimated read time 1 min read

வில்வித்தை இறுதிப் போட்டியில் தனிபர்தி சிகிதா, பிரதீப் பிரிதிகா மற்றும் வென்னம் ஜோதி சுரேகா ஆகியோர் கொண்ட பெண்கள் அணி 238 புள்ளிகள் பெற்று சீன அணியை வென்றது. இறுதிப் போட்டியில் சீன அணி 234 புள்ளிகள் பெற்றது. இதன்மூலம் வில்வித்தையில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. மேலும் வில்வித்தையில் தென் கொரியாவின் சாதனை சமன் செய்துள்ளது.

இதன்மூலம் இந்த ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா 7-ஆவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. வில்வித்தை இறுதிப் போட்டியில் சீனா அணியை எதிர்கொண்ட இந்தியா, முதல் சுற்று முதல் முன்னணியில் இருந்தது. முதல் சுற்றில் சீனா அணி 27 புள்ளிகள் பெற்ற நிலையில், இந்தியா அணி 30 புள்ளிகள் பெற்று முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இந்தியா அணி 60-57 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெழ்ற்றது.

பின்னர் மூன்றாவது சுற்றிலும் இந்தியா 89 – 87 புள்ளிகள் பெற்றது. இரண்டாவது பாதியிலும் இந்தியா முன்னிலை பெற்ற நிலையில், 238-234 என்ற புள்ளிகணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 238 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி சர்வதேச வில்வித்தை போட்டிகளில் புதிய சாதனை படைத்துள்ளது.

முன்னதாக கடந்த 2014 ஆசிய விளையாட்டு தொடரில் தென் கொரிய அணி 238 புள்ளிகள் பெற்றது. அந்த சாதனையை இந்தியா தற்போது சமன் செய்துள்ளது. இந்திய அணியில் இடம்பெற்ற ஜோதிக்கு இது ஆசிய போட்டியில் 4வது தங்கப் பதக்கம் ஆகும். இந்த போட்டியில் இந்தியா தங்கம் வென்றதன் மூலம் 7 தங்கப்பதக்கம், 21 வெள்ளிப்பதக்கம், மற்றும் 25 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தமாக 53 பதக்கங்கள் பெற்றுள்ளது

அதேபோல், சிகிதா மற்றும் பிரிதிகா ஆகியோருக்கு ஆசிய விளையாட்டு தொடரில் முதல் தங்கப்பதக்கம் ஆகும். முன்னதாக ஆசிய விளையாட்டு தொடரின் அரையிறுதிப் போட்டியில் 235 – 233 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி வாகை சூடியது.

You May Also Like

More From Author