தேசிய தின விழாவைக் கொண்டாடும் விருந்தில் சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங்கின் முக்கிய உரை

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 77ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விருந்து நிகழ்வு செப்டம்பர் 30ஆம் நாள் இரவு பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத்தலைவரும், மத்திய இராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் இதில் பங்கெடுத்து முக்கிய உரைநிகழ்த்தினார்.

நீண்டகால ஆய்வு மற்றும் நடைமுறைப் பயிற்சியின் மூலம்,  சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிச அமைப்புமுறையின் மிகப்பெரிய மேம்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் ஆட்சி அமைப்புமுறை மற்றும் ஆட்சி திறனின் நவீனமயமாக்கல் நிலையும் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும், சீன தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சியை நனவாக்குவது தடுத்து நிறுத்த முடியாத போக்காகும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார். நாம் நமது நம்பிக்கையில் உறுதியாக இருந்து, நமது இலக்குகளில் கவனம் செலுத்தி, படிப்படியாக சீராக முன்னேறினால், வெற்றியாவது, மாபெரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், மாபெரும் சீன மக்களுக்கும், மாபெரும் சீன மக்கள் குடியரசுக்கும் நிச்சயமாகச் சொந்தமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

தனது உரைநிகழ்த்தியபோது, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு மற்றும் அரசவையின் சார்பாக, ஷிச்சின்பிங் நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசிய இனக்குழு மக்களுக்கும், சீன மக்கள் விடுதலை படை மற்றும் மக்கள் ஆயுதக் காவல் படையின் அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும், அனைத்து ஜனநாயகக் கட்சிகள் மற்றும் கட்சி சாராத பிரமுகர்களுக்கும், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசம், மக்கெள சிறப்பு நிர்வாகப் பிரதேசம், தைவான் மற்றும் வெளிநாடுகளில் வாழும் சீனர்களுக்கும் தேசிய தின விழாவின் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும், சீனாவின் வளர்ச்சியில் நீண்ட காலமாக அக்கறை கொண்டு, இதற்கு வரும் நட்பு நாடுகளுக்கும் சர்வதேச நண்பர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியையும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author