அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் பாடபுத்தகங்களின் விலை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது பெற்றோர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கு உரிய விளக்கம் வேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்த நிலையில், இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “பாடப் புத்தகத்தின் மேல் அட்டை, காகிதம் மற்றும் அச்சுக்கூலி உள்ளிட்டவைகளின் விலை உயர்வின் காரணமாக பாடப்புத்தகம் தயாரிப்பதற்கு ஆகும் செலவினை ஈடுகட்டுவதற்காக மட்டுமே பாடநூல்கள் விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு லாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளி பாடப் புத்தகங்கள் விலை உயர்வுக்கான காரணம் என்ன?
Estimated read time
0 min read