கொலம்பியா நாட்டில் பராசூட் சாகச விளையாட்டில் ஈடுபட்ட 47 வயதான போலந்து நாட்டு பெண் சுற்றுலாப் பயணி ஒருவர், நூற்றுக்கணக்கான மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண் சாகசப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன், அவருடைய உடலில் கட்டப்பட வேண்டிய பாதுகாப்புப் பட்டை சரியாகப் பூட்டப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அவர் காற்றில் பறக்கத் தொடங்கிய சில விநாடிகளிலேயே நிலைதடுமாறிக் கீழே நழுவத் தொடங்கியுள்ளார்.
அவருடன் பறந்த பயிற்றுநர் காற்றில் தொங்கியபடியே அந்தப் பெண்ணை இறுக்கமாகப் பிடித்துக் காப்பாற்றக் தீவிரமாக முயன்றுள்ளார். ஆனால், காற்றின் வேகத்தினாலும் புவிஈர்ப்பு விசையினாலும் அவரால் தொடர்ந்து பிடித்து வைத்திருக்க முடியாமல் கைநழுவி அந்தப் பெண் கீழே விழுந்துள்ளார்.
Eğitmenin havada kadını tutma çabası çaresiz kaldı. pic.twitter.com/mr7yqo0yWY
— 23 DERECE (@yirmiucderece) September 30, 2026
“>
சுற்றுலாத் தலங்களில் முறையான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாமல் சாகச விளையாட்டுகளை நடத்துவது சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கே ஆபத்தாக முடிவதாக உலகெங்கிலும் உள்ள மக்கள் கவலையும் கொந்தளிப்பும் தெரிவித்து வருகின்றனர்.
