சீன மருத்துவ கப்பலின் நல்லிணக்கக் கடமை நிறைவு

Estimated read time 1 min read

சீன மருத்துவ கப்பலின் நல்லிணக்கக் கடமை நிறைவு

சீனக் கடற்படையின் ஹெபிங் ஃபாங்சோ எனும் மருத்துவ கப்பல் நல்லிணக்கக் கடமை 2024-ஐ நிறைவு செய்து 16-ஆம் நாள் காலை செஜியாங் மாநிலத்தின் சோஷேன் நகருக்குத் திரும்பியது.

நல்லிணக்க கடமை-2024 2024ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் நாள் முதல் இதுவரை, இந்தக் கப்பல் முறையே செஷெல்ஸ், தான்சானியா, இலங்கை முதலிய ஆசிய மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 13 நாடுகளில் பயணம் மேற்கொண்டு மனித நேய மருத்துவச் சேவை வழங்கியது. இதன் மொத்த பயண தூரம் 30 ஆயிரம் கடல் மைல் ஆகும்.

பயணங்களின் போது, ஹெபிங் ஃபாங்சோ மருத்துவ கப்பல் பன்னாட்டு மக்களுக்கு 82 ஆயிரத்து 980 மருத்துவ சேவைகளையும் 1392 அறுவை சிகிச்சைகளையும் செய்துள்ளது. தொடர்புடைய நாடுகளுடன் பரிமாற்றம் உள்ளிட்ட செயல்பாடுகளையும் மேற்கொண்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author