உலகின் மிகப்பெரிய மற்றும் சக்தி வாய்ந்த ஒளியியல் தொலைநோக்கியான முப்பது மீட்டர் தொலைநோக்கி திட்டத்தை அமைக்க இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்கா, கனடா, சீனா உள்ளிட்ட உலகளாவிய கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுகின்றன.
இந்த தொலைநோக்கியின் முதன்மை ஆடி (Primary Mirror) 30 மீட்டர் விட்டம் கொண்டது.
இது 492 சிறிய அறுகோண (Hexagonal) கண்ணாடிகளை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு பிரம்மாண்ட கட்டமைப்பாகும்.
இந்த 492 கண்ணாடிகளையும் நானோ-மீட்டர் துல்லியத்தில் சீரமைக்கும் பொறுப்பு இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஒளியியல்-இயந்திரவியல் அமைப்பு (Opto-Mechanical System) மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் போன்ற முக்கிய தொழில்நுட்பங்களை இந்திய நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன.
வேற்றுகிரகவாசிகளை தேடும் இந்தியா – ஜப்பான் கூட்டுத் திட்டம்
