மும்பை : இந்தியன்ஸ் (MI) அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா மீண்டும் பொறுப்பேற்கவுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் அப்பட்டமான வதந்திகள் என்று அந்த அணியின் நிர்வாக வட்டாரங்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளன.
ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து முறை சாம்பியன் மகுடத்தைச் சூட்டி அசைக்க முடியாத சாதனை படைத்த ‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மா, வரவிருக்கும் 2027 ஐபிஎல் (IPL 2027) தொடரில் மீண்டும் மும்பை அணியை வழிநடத்தப் போகிறார் என்ற தகவல் பரவிய உடனே கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வம் உச்சக்கட்டத்தை எட்டியதுடன், முகநூல் மற்றும் எக்ஸ் தளங்களில் ரசிகர்கள் இதனை வெறித்தனமாகக் கொண்டாடித் தீர்த்தனர். ஆனால், ரசிகர்களின் இந்த இமாலய எதிர்பார்ப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, என்டிடிவி (NDTV) ஊடகத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தியோகப்பூர்வ வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, ரோஹித் சர்மாவுக்கு மீண்டும் கேப்டன் பதவி வழங்கப்படவுள்ளதாக வெளியாகி வரும் செய்திகளில் உண்மை இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், வரவிருக்கக்கூடிய புதிய ஐபிஎல் சீசனுக்கான கேப்டன்சி மாற்றம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ உள்நாட்டு விவாதங்களும் (Internal Discussions) இதுவரை பிரான்சைஸ் நிர்வாகத்திற்குள் அரங்கேறவே இல்லை என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளனர்.
அதே சமயம், தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியாவை (Hardik Pandya) மாற்று அணியுடன் வர்த்தகம் செய்ய (Trading) மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தீவிரமாக யோசித்து வருவதாகவும், அதற்கான தகுதியான மாற்று முன்மொழிவுகள் (Trade Proposals) வந்தால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் ஒரு புதிய திடுக்கிடும் ரகசியத்தை உடைத்துள்ளன. ஒருவேளை ஐபிஎல் 2027 தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஹர்திக் பாண்டியா மும்பை அணியை விட்டு அதிகாரப்பூர்வமாக வெளியேறும் பட்சத்தில், அணியை வழிநடத்த ரோஹித் சர்மாவைத் தவிர்த்து தங்களுக்குப் பின்னால் சூர்யகுமார் யாதவ், பும்ரா போன்ற எக்கச்சக்கமான உலகத்தரம் வாய்ந்த மாற்று கேப்டன்சி ஆப்ஷன்கள் அசெம்பிள் ஆகி தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், தற்போதைய நிலவரப்படி ஹர்திக் பாண்டியாவைத் டிரேடிங் செய்வதற்கு எந்தவொரு ஐபிஎல் அணியிடமிருந்தும் முறையான அல்லது தகுதியான ஆஃபர்கள் எதுவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்னும் வந்து சேரவில்லை என்பதால் ஹர்திக்கே தற்போதைக்குத் தொடருவார் என்று தெரிகிறது.
