குவாங்சோ நகரில் அக்டோபர் 14ஆம் நாள் முற்பகலில் நடைபெற்ற 70ஆம் ஆண்டு சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்காட்சிக்கான கலந்துரையாடல் கூட்டத்தில் சீனத் தலைமையமைச்சர் லீ ஜியாங் பங்கெடுத்தார்.
வெளிநாட்டு கொள்முதலாளர் மற்றும் கண்காட்சியாளர்களின் பிரதிநிதிகளின் உரைகளைக் கேட்டறிந்த பிறகு லீ ஜியாங் கூறுகையில், சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்காட்சி நடத்தப்பட்ட 70ஆண்டுகளாக, சீனாவின் வெளிநாட்டு திறப்பு மற்றும் வளர்ச்சியுடன் இப்பொருட்காட்சியும் வலுவடைந்து வருகின்றது. இப்பொருட்காட்சி, சீனாவின் வெளிநாட்டு திறப்புக்கான சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பது மட்டுமல்லாமல், உலகம் சீனாவை அறிந்து கொள்வதற்கான முக்கிய ஜன்னலாக மாறியுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்காட்சியானது, விரிவான வகைகள், வசதியான மற்றும் திறமையான ஒரு ஒருங்கிணைந்த வர்த்தகத் தளமாகும். இது மாதிரியான வர்த்தக தளம் உலகில் மிகவும் குறைவாக உள்ளது. புதிய முன்னேறிய தயாரிப்புகளையும் தொழில்நுட்பங்களையும் ஒன்றிணைத்த இப்பொருட்காட்சி, பாரம்பரிய சரக்கு பொருட்கள் வர்த்தகத்திற்கான ஒரு மாபெரும் மேடையாக மட்டுமல்லாமல், புதிய வர்த்தகத்தின் வளர்ச்சிக்கு ஒரு அளவுகோலாகவும் செயல்படுகிறது என்று தெரிவித்தார்.
