ஹோர்முஸ் நீரிணையைப் பயன்படுத்தும் சரக்குக் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்க ஈரான் முயற்சிப்பதற்கு, 60-க்கும் மேற்பட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த நீரிணையைப் பயன்படுத்தும் கப்பல்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரிட்டன், கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் இணைந்து, சர்வதேச கடல்வழிப் போக்குவரத்துக்கான சுதந்திரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியுள்ளன. மொத்தம் 60 நாடுகள் நீரிணைகளில் கட்டணம் வசூலிப்பதற்கு எதிரான பிரகடனத்தை ஆதரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
