140ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சியில் சீனத் தலைமையமைச்சர் உரை

Estimated read time 0 min read

சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் அக்டோபர் 14ஆம் நாள் பிற்பகல், குவாங்சோ நகரில் நடைபெற்ற 140ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சியின் துவக்க விழாவில் உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறுகையில், இவ்வாண்டு, இப்பொருட்காட்சி நிறுவப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவாகும். இப்பொருட்காட்சி, பல சோதனைகளைக் கடந்து நிலைத்து நின்று, புதிய உயிர் ஆற்றலை வெளிக்காட்டி வருகிறது என்றா். மேலும், மேலதிகமான உயர்தரம் வாய்ந்த உற்பத்திப் பொருட்களை சீனா இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த அவர், மேலதிகமான நாடுகள் சீனாவுடன் இணைந்து, வர்த்தக மேம்பாடு மற்றும் சமநிலையின் அடிப்படையில் வளர்ச்சியை ஆக்கப்பூர்வமாக முன்னேற்ற சீனா விரும்புவதாகவும் கூறினார்.  

உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் இவேலா அம்மையார் காணொளி வழியாக உரை நிகழ்த்துகையில், சீனாவின் வளர்ச்சி மாபெரும் சாதனைகளைப் பெற்று, உலகத்திற்கு அரிய வளர்ச்சி வாய்ப்புக்களைக் கொண்டு வரும் என்றார். அதோடு, சீனா உலகத்துடன் இணையும் முக்கிய மேடையாக இப்பொருட்காட்சி விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author