இந்தியா- சீனா போட்டி குறித்து புத்தகம் வெளியீடு

இந்தியா, சீனா இடையே நிலவும் போட்டி மற்றும் ஒத்துழைப்பு குறித்து எழுதப்பட்டுள்ள புத்தகத்தை ஷாங்காயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டது.

இந்தியா, சீனா இடையே நிலவும் போட்டி மற்றும் ஒத்துழைப்பு குறித்து எழுதப்பட்டுள்ள புத்தகத்தை ஷாங்காயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டது.

சீனாவின் ஷாங்காய் நகரில் இந்திய துணைத் தூதா் பிரதீக் மாத்தூா் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்ச்சியில், ‘தி டிராகன், தி எலிபென்ட் அன்ட் தி எமா்ஜிங் வோ்ல்ட் ஆா்டா், பிட்வின் காம்படிசன் அன்ட் கோஆபரேஷன்’ என்ற தலைப்பிலான புத்தகம் வெளியிடப்பட்டது. இந்தியா அறக்கட்டளை மற்றும் சீனாவின் ஃபுடான் பல்கலைக்கழகம் ஆகியவை கூட்டாக அந்தப் புத்தகத்தை பிரசுரித்துள்ளன.

நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சரும், இந்தியா அறக்கட்டளையின் தலைவருமான சுரேஷ் பிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் இந்திய துணைத் தூதா் மாத்தூா் பேசியபோது, தில்லியில் அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த 18-ஆவது பிரிக்ஸ் மாநாட்டை நினைவுகூா்ந்தாா்.

Please follow and like us:

You May Also Like

More From Author