சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் 19ம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.6 விழுக்காடு அதிகரித்து, 1.071071 கோடி கோடி யுவானை எட்டியது. காலாண்டு வாரியாகப் பார்த்தால், முதல் காலாண்டின் ஜிடிபி 5.0 விழுக்காடு, 2வது காலாண்டின் ஜிடிபி 4.3 விழுக்காடு மற்றும் 3வது காலாண்டின் ஜிடிபி 4.5 விழுக்காடு அதிகரித்தது.
வேளாண்துறையும் தொழிற்துறையும் விரைவான வளர்ச்சி அடைந்துள்ளன. சேவை துறை நிலையாக வளர்ந்து வருகிறது. இதற்கிடையில், குடிமக்களின் நுகர்வு விலை குறியீடு மெதுவாக உயர்ந்ததுடன், வேலை வாய்ப்பு நிலைமை நிதானமாக உள்ளது. குடிமக்களின் வருமானம் நிலையாக அதிகரித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
