2024ஆம் ஆண்டின் டிசம்பர் 31ஆம் நாள் முதல் 2025ஆம் ஆண்டின் ஜனவரி 12ஆம் நாள் மாலை 4 மணிக்கு வரை, வசந்த விழா பயணத்திற்காக மொத்தம் 7 கோடியே 57 லட்சத்து 40 ஆயிரம் ரயில் சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய ரயில் சீட்டுகளின் விற்பனை நிலவரப்படி, ஷாங்காய், குவாங்சோ, பெய்ஜிங் மற்றும் ஷென்சென் ஆகியவை பிரபலமான புறப்பாடு நகரங்கள் ஆகும். பெய்ஜிங், குவாங்சோ, வுஹான் மற்றும் செங்டு ஆகியவை மிக அதிக பயணிகள் சென்று சேரும் நகரங்கள் ஆகும்.