அண்மையில் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஹைலோங்ஜியாங் மாநிலத்தின் ஹார்பின் மாநகரின் சில இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 7ஆம் நாள் அப்பகுதிகளுக்குச் சென்று வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள நெல் வயல்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சேதமடைந்த வீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளின் மறுசீமைப்புப் பணகளை அறிந்து கொண்டு, கிராமவாசிகளின் வீடுகளில் நுழைந்து ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது, பாதிப்பு அளவு மற்றும் வாழ்க்கை உத்தரவாதம் பற்றிய விவரங்களை அறிந்து கொண்ட ஷிச்சின்பிங், அனைவரும் நம்பிக்கையுடன் இன்னால்களைத் தாண்டி, உற்பத்தி மற்றும் வாழ்க்கைக்கான இயல்பு நிலைக்கு வெகுவிரைவில் திரும்பி செல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.