நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில கூட வெற்றி அடையவில்லை. எனினும் பல இடங்களில் இரண்டாம் இடத்தினை பிடித்தது.
அதேபோல, கோவையில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், தோல்வியை தழுவினார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,”தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்திருக்கிறது, அதில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ்நாட்டிலிருந்து NDA கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்ற இலக்கு இருந்தது. அதை அடைய முடியவில்லை என்பது வருத்தம்” என்று கூறியுள்ளார்.
“2026ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது தான் எங்களின் இலக்கு. 2026-ல் தமிழக அரசியலில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி அமையும். நிச்சயம் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடக்கும்” என்று உறுதிபட தெரிவித்தார்.
2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: அண்ணாமலை
