சீன அரசவையின் தைவான் விவகார அலுவலகம் நவம்பர் 19ம் நாள் செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. ஜப்பானின் தலைமை அமைச்சர் தகைச்சி சனே தைவான் குறித்து வெளியிட்ட கூற்று, சர்வதேச குற்றச்சாட்டுகளை ஏற்படுத்தியது என்று சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் நிறுவனத்தின் செய்தியாளர் ஒருவர் இக்கூட்டத்தில் குறிப்பிட்டார். இந்த நிறுவனம் நடத்திய ஒரு கருத்து கணிப்பு முடிவின்படி, வரலாற்றில் தனது குற்றங்களை ஜப்பான் சுய மதிப்பீடு செய்து, சீன இறையாண்மை மற்றும் உரிமை பிரதேச ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று 91.1 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.
அரசவையின் தைவான் விவகார அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜு ஃபாங் லியேன் அம்மையார் இது குறித்து கூறுகையில், வரலாறு மறக்கப்படவும் மாற்றப்படவும் மாட்டாது என்பதை இது காட்டியது. தைவான் பிரச்சினை, சீனாவின் உள்விவகாரம். இதில் எந்த வெளிப்புற சக்தியும் தலையிடக் கூடாது. ஜப்பான் இத்தகைய தலையீட்டு நடவடிக்கையையும் ஆத்திரமூட்டல் நடத்தையையும் உடனே நிறுத்த வேண்டும். தவறான பாதையில் தொடர்ந்து செல்லக் கூடாது என்று வலியுறுத்தினார்.
