சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போரின் வெற்றியின் 80ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட கலைநிகழ்ச்சி
சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் வெளியிட்ட செய்தியின்படி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை, பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சகம், சி.எம்.ஜி, மத்திய இராணுவக் கமிட்டியின் அரசியல் பணிப் பிரிவு, பெய்ஜிங் மாநகராட்சி முதலியவை செப்டம்பர் 3ஆம் நாளன்று சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலகப் பாசிச எதிர்ப்புப் போரின் வெற்றியின் 80ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட கலை நிகழ்ச்சியைக் கூட்டாக நடத்தவுள்ளன.
உள்நாட்டு சிறந்த கலைஞர்கள், கலைத்துறையின் இளம் பணியாளர்கள் உள்ளிட்டோர் இதில் முக்கியப் பங்காற்றி, மக்களுக்கு சிறப்பான, கலையழகுமிக்கக் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவர். இதனிடையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையும், பண்பாடு மற்றும் சுற்றுலா துறை அமைச்சகமும் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை, சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்புப் போரின் வெற்றியின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தலைசிறந்த கலைப் படைப்புகளை வெளியிடும்.
பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சகமும், சீனக் கலை இலக்கிய சம்மேளனமும் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை, சீன நுண்கலை காட்சியகத்தில், சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலகப் பாசிச எதிர்ப்புப் போரின் வெற்றி 80ஆவது ஆண்டு நிறைவுக்கான நுண்கலை படைப்புகளைக் காட்சிக்கு வைக்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.