இந்தியாவின் ஆட்டோமொபைல் துறைக்கு நீண்ட நாட்களாக இருந்த அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், சீனாவிடமிருந்து முக்கியமான ரேர் எர்த் காந்தங்களை (Rare Earth magnets) நேரடியாக இறக்குமதி செய்ய நான்கு உள்நாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு முதல் உரிமங்களை வழங்கியுள்ளது.
இந்த உரிமங்களைப் பெற்ற நிறுவனங்களில் ஹிடாச்சி மற்றும் காண்டினென்டல் இந்தியா போன்ற முன்னணி சப்ளையர்களின் இந்தியப் பிரிவுகளும் அடங்கும்.
உலகின் ஆதிக்கம் செலுத்தும் ரேர் எர்த் காந்த உற்பத்தியாளரான சீனா, கடந்த ஏப்ரல் மாதம் இந்த பொருட்கள் மீதான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை இறுக்கியதிலிருந்து இந்திய ஆட்டோமொபைல் துறை கடுமையான நெருக்கடியில் இருந்தது.
சீனாவின் ரேர் எர்த் காந்த இறக்குமதிக்கு நான்கு இந்திய நிறுவனங்களுக்கு உரிமம்
