அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி விருது வழங்குகிறார் முதலமைச்சர் விஜய்.
இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள், ஆண்டுதோறும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களை நேரில் அழைத்து விருது வழங்கிப் பாராட்டி வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டு அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களுக்கு முதல் கட்டமாக நாளை (04.11.2026, புதன்கிழமை), சென்னை நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
இதில் அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள் கலந்துகொள்கிறார்கள். இம்மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் நாளை காலை 11.00 மணிக்கு விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டு, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட உள்ளன. பின்னர் அவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட இருக்கிறது. எதிர்காலச் சமுதாயம் வளமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும் என்பதில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தனிக் கவனம் செலுத்திச் செயலாற்றி வருகிறார். நாளை மதியம் 2.00 மணி அளவில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் கலந்துகொண்டு மாணவச் செல்வங்களுக்கு, அவர்களின் பெற்றோர் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத் தொகையும் வழங்கி, வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்,
