புதிய பொற்காலத்துக்குள் நுழைந்த ‘சீனாவில் பயணம்’

Estimated read time 1 min read

அண்மையில் சீனாவில் இருந்து வாங்கும் பொருட்கள் பற்றி அறிமுகப்படுத்தும் சைனா ஹால் எனும் காணொளி வெளிநாட்டு ஊடகங்களில் வைரலாகியுள்ளது. சீனாவின் உள்ளூர் தயாரிப்புகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடையில் பெரிதும் வரவேற்கப்பட்டன. சீனாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை இது வெளிக்காட்டியுள்ளது.

சீனாவுக்கு வரும் பெரும்பாலான வெளிநாட்டுப் பயணிகள் கேட்கும் ஒரே கேள்வி சீனா இவ்வளவு சீராக வளர்ந்துள்ளதற்கான காரணம் என்ன என்பதாகும்.  சீனாவிற்கு வருவது புதிய பொற்காலத்துக்குள் நுழைவதாக உள்ளது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

புதிய புள்ளிவிவரங்களின்படி, இவ்வாண்டு 3ஆவது காலாண்டில் சீனாவில் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 1கோடியே 16லட்சத்து 1 ஆயிரத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட, 15.6விழுக்காடு அதிகமாகும். அதுமட்டுமல்லாமல், கலச்சார பயணம், அறிவியல் தொழில்நுட்ப பயணம், தொற்சாலைப் பயணம் போன்ற வெளிநாட்டு பயணிகளின் அனுபவங்களும் புத்தம் புதிதாக மாறி வருகின்றன.

சீனக் கலச்சாரத்தின் பெரும் ஈர்ப்பாற்றல்,  அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க ஆற்றல், சர்வதேச செல்வாக்கு ஆகியவற்றை இது வெளிக்காட்டுவதோடு, திறப்பை விரிவாக்கி வரும் சீனா சர்வதேச சமூகத்தில் மேலதிக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாகவும் நிரூபித்துள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில், சேவைத் துறையின் தரம் மற்றும் செயல்திறன் மேம்பாடு என்ற நடவடிக்கையைச் சீனா செயல்படுத்தவுள்ளது. அதன் மூலம், வெளிநாட்டுப் பயணிகளுக்கு மேலும் சிறந்த அனுபவங்களை வழங்க முடியும்.

Please follow and like us:

You May Also Like

More From Author