அமெரிக்காவில் சீனாவின் ஆட்சிமுறை மற்றும் உலகின் வளர்ச்சி பற்றி கலந்துரையாடல்

Estimated read time 0 min read

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநகரில் நவம்பர் 2ஆம் நாள் சீன ஊடக குழுமமும், அமெரிக்காவுக்கான சீனத் தூதரகமும் கூட்டாக நடத்திய“சீனாவின் ஆட்சிமுறை மற்றும் உலகின் வளர்ச்சி”எனும் உலகளாவிய கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் தொழில் மற்றும் வணிகம், செய்தி ஊடகத் துறை முதலியவற்றைச் சேர்ந்த சுமார் 100 விருந்தினர்கள் கலந்துகொண்டனர். சீனாவின் ஆட்சிமுறைக்கான வெற்றிகரமான அனுபவங்கள், சீனாவின் வளர்ச்சி உலகத்திற்கு அளித்த பங்கு உள்ளிட்ட கருப்பொருட்கள் குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிகொண்டனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹைய்சியோங் காணொளி வழியாக இந்நிகழ்வில் உரைநிகழ்த்தினார். அபோபது அவர் கூறுகையில், தற்போதைய சீனாவை புரிந்துகொள்ள விரும்பினாலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டியின் 5ஆவது முழு அமர்வு அண்மையில் பெய்ஜிங் மாநகரில் நிறைவடைந்தது, உலகளாவில் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. 105 ஆண்டு ஒளிமயமான வரலாறுடைய இக்கட்சி, மேலும் உயர் வரையறையின்படி சுய கட்டுமானத்தை விரைவுபடுத்தி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சுய ஆட்சியின் மூலம் சீனாவின் ஆட்சிமுறையை மேம்படுத்தும் என்று இம்முழு அமர்வில் கூறப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய கதைகளை சீன ஊடக குழுமம் மேலும் நன்றாக விளக்கிக்கூறும். கூட்டுப் படிப்பு மற்றும் பகிர்வு எனும் உரையாடல் தளங்களை மேலும் விரிவாக்கி, அரசு நிறுவனங்கள், சிந்தனை கிடங்கு அமைப்புகள், செய்திஊடகங்கள் முதலியவற்றுடனான ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, மனித குலத்தின் அமைதி இலட்சியத்திற்கு முக்கிய உந்து ஆற்றலை சீ.எம்.ஜி முயற்சியுடன் கொண்டு வரும் என்று தெரிவித்தார்.

மேலும், அமெரிக்க குன் நிதியத்தின் தலைவர் ராபர்ட் குன், அமெரிக்காவில் சீன மக்களின் நண்பர் ரொனால்ட் சகோல்ஸ்கி ஆகிய இருவரும் இதில் உரைநிகழ்த்தினர்.

Please follow and like us:

You May Also Like

More From Author