செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியால் உருவாகக்கூடிய ஆபத்துகளைத் தடுக்கும் நோக்கில், OpenAI நிறுவனம் ஒரு புதிய அதிரடி பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறும் வகையில் செயல்படும் ஏஐ மாடல்களை வெறும் 35 வினாடிகளில் முற்றிலும் முடக்கும் திறன் கொண்ட புதிய தொழில்நுட்பத்தை அந்நிறுவனம் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
இந்த புதிய பாதுகாப்பு அமைப்பிற்கு ‘Control Room’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த கண்ட்ரோல் ரூம் அமைப்பானது, ஏஐ மாடல்கள் இயங்கும்போது அவற்றின் ஒவ்வொரு செயல்பாட்டையும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். ஒருவேளை அந்த மாடல்களில் மனித குலத்திற்கு எதிரான அபாயங்கள் அல்லது கட்டுப்பாட்டை மீறும் செயல்பாடுகள் கண்டறியப்பட்டால், உடனடியாக அது எச்சரிக்கை மணி அடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு ஏதேனும் ஆபத்துகள் இருப்பதை இந்த அமைப்பு கண்டறிந்தால், உடனே ‘Kill Switch’ வசதியைச் செயல்படுத்துவதன் மூலம் அந்த ஏஐ மாடல்களின் வெளியீடுகளை (Outputs) முழுமையாக முடக்கிவிட முடியும் என OpenAI நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏஐ மாடல்களின் அசுர வளர்ச்சியைக் கண்டு உலக நாடுகள் அச்சமடைந்து வரும் வேளையில், OpenAI நிறுவனத்தின் இந்த 35 வினாடி ‘Kill Switch’ தொழில்நுட்பம் ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு அரணாகப் பார்க்கப்படுகிறது.
