மேரி இ. ப்ரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சாககுச்சி ஆகிய மூவருக்கும் வெளிப்புற நோயெதிர்ப்புச் சக்தி சகிப்புத்தன்மை (Peripheral Immune Tolerance) குறித்த அவர்களின் முன்னோடி ஆராய்ச்சிக்காக 2025 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.
நமது உடல் அதன் சொந்த திசுக்களைத் தவறுதலாகத் தாக்காமல், நோய் எதிர்ப்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்துகொள்வதில் அவர்களின் கண்டுபிடிப்புகள் அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதுவே தன்னுடல் தாக்க நோய்களுக்கு (Autoimmune Diseases) முக்கியக் காரணம் ஆகும். இந்த மூவரின் ஆராய்ச்சியும், சீராக்கும் டி செல்கள் (Regulatory T cells) எனப்படும் சிறப்பு நோயெதிர்ப்பு உயிரணுக்களின் முக்கியப் பங்கை வெளிப்படுத்தியது.
மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு; விருது வென்ற மூன்று விஞ்ஞானிகள் யார்?
