இலங்கையின் வெப்ப மண்டல பழ வளர்ப்பு தொழில் நுட்பத்துக்கான பயிற்சி வகுப்பு துவக்கம்

சீனாவின் ஆதரவுடன் இலங்கை வெப்ப மண்டல பழக்கன்று இனப்பெருக்கம் மற்றும் திறன்மிகு உற்பத்தி தொழில் நுட்பத்துக்கான பயிற்சி வகுப்புகளின் துவக்க விழா நவம்பர் 9ஆம் நாள் இலங்கையின் தெற்கு மாநிலத்தில் உள்ள ருஹுணு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இலங்கைக்கான சீனத் தூதர் வெய் ஹுவாசியங் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்.

சீனாவின் ஹெய்நன் மாநில வெள விவகார அலுவலகமும், சீன வெப்ப மண்டல வேளாண் அறிவியல் கழகத்தைச் சேர்ந்த தெற்காசிய வெப்ப மண்டல பயிர்களுக்கான ஆய்வகமும் இந்த பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்தன. வகுப்பறை கற்பித்தல், நிலத்தில் நேரடி கற்பித்தல் ஆகிய வழிமுறைகளின் மூலம், வாழை, மாங்காய், அண்ணாசிப்பழம் ஆகிய மூன்று வகை பிரதிநிதித்துவ வெப்ப மண்டல பழக்கன்றுகளின் தரமான இனப்பெருக்கம் புதிய வகைளின் பயிரிடுதல், திறன்மிகு உற்பத்தி உள்ளிட்ட துறைகளின் அறிவுகளைப் பற்றி இவ்வகுப்பில் அறிந்து கொள்ளலாம். அதேவேளையில், சீன வெப்ப மண்டல வேளாண் வளர்ச்சி, சீன-இலங்கை வேளாண் தொழில் நுட்ப ஒத்துழைப்பு முதலியவை குறித்தும் அறிமுகப்படுத்தப்படும்.

Please follow and like us:

You May Also Like

More From Author