மனித நாகரிகம் மற்றும் சமூக முன்னேற்றத்தின் முக்கிய ஊக்குவிப்பாளர்கள் மகளிர் தான். பல்வேறு துறைகளில் அவர்கள் மாபெரும் சாதனைகளைப் புரிந்துள்ளனர் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மகளிர் மன்றம் தொடங்கப்பட்டது முதல், அனைத்து நாடுகளைச் சேர்ந்த மகளிர் “ஷாங்காய் எழுச்சியை” நிலைநிறுத்தி, மேலும் நெருங்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்குவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளனர்.
இம்மன்றம், பல்வேறு நாட்டு மக்களின் இதயங்களை இணைத்த ஆக்கப்பூர்வமான பங்குகளை மேம்படுத்துவதைத் தொடர்ந்து வெளிக்கொணர்ந்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மனிதநேய உறவை மேலும் அதிகரிக்கப் புதிய உயிராற்றல் ஊட்ட வேண்டும் என்று ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.