இந்திய அஞ்சல் துறை விரைவில் உத்தரவாதமான அஞ்சல் மற்றும் பார்சல் டெலிவரி சேவைகளை 24 மணி நேரமும், 48 மணி நேரமும் வழங்கவுள்ளது.
புதிய சேவை ஜனவரி மாதம் தொடங்கப்படும் என்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை, இந்தியா அஞ்சல் துறையின் செயல்பாடுகளை நவீனமயமாக்குதல், வாடிக்கையாளர் நம்பிக்கையை மேம்படுத்துதல் மற்றும் தனியார் கூரியர் சேவைகளுடன் மிகவும் திறம்பட போட்டியிடுதல், நாடு முழுவதும் வேகமான மற்றும் நம்பகமான டெலிவரியை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜனவரி 2026 ஒருநாள் டெலிவரி சேவையை அறிமுகப்படுத்த உள்ளது இந்திய அஞ்சல் துறை
