மருது சகோதரர்கள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னையில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், மருது சகோதரர்களின் நினைவு தினத்தையோட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
சிவகங்கைச் சீமையின் வீரத்துக்கு எடுத்துக்காட்டாக இம்மண்ணில் நிலைத்திருக்கும் மருது சகோதரர்கள் நினைவு நாள்.
ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடும் உணர்வை அந்நாளிலேயே விதைத்து, தலைசிறந்த தியாகிகளாகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மருதிருவரின் நினைவை என்றும் போற்றுவோம்! இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு முன்னோடியாகத் தமிழர்கள் முன்னின்று உயிர்நீத்த வரலாற்றைத் தொடர்ந்து சொல்லுவோம் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு 72,633 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்த விண்ணப்பங்களை தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு [மேலும்…]
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: இந்திய இளைஞர்கள் தொழில்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களை உருவாக்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சியை [மேலும்…]
தென்காசி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் குற்றாலம் அருவியின் அருகில் அமைந்துள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்குற்றாலநாதர் திருக்கோவில். நடராஜரின் ஐந்து நடன சபைகளில் ஒன்றான [மேலும்…]
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஆதிகுடி கிராமத்தில் அமைந்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலம் அங்குரேஸ்வரர் திருக்கோவில். முதலாம் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டதாகக் [மேலும்…]
மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ‘பிரதமமந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தை’ செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் [மேலும்…]