“ஜிம்மில் இப்படி ஒரு ஆபத்தா?”.. டிரெட்மில் ஓடிய இளம்பெண்… திடீரென 3-வது மாடியில் இருந்து விழுந்து பலி.. வைரலாகும் பதறவைக்கும் வீடியோ..!! 

Estimated read time 1 min read

இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான் மாகாணம், பொன்டியானாக் பகுதியில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் நடந்த துயரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள மூன்றாவது மாடியில் செயல்பட்டு வந்த ஜிம்மில், 22 வயது இளம்பெண் ஒருவர் டிரெட்மில்லில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய அவர், பின்னால் இருந்த ஜன்னல் வழியாக கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது டிரெட்மில் அமைக்கப்பட்டிருந்த இடத்துக்கும் அதன் பின்னால் இருந்த ஜன்னலுக்கும் இடையே வெறும் 60 சென்டிமீட்டர் மட்டுமே இடைவெளி இருந்ததாகக் கண்டறியப்பட்டதாகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உடற்பயிற்சிக் கூடத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, உயரமான மாடியில் ஜன்னலுக்கு அருகே டிரெட்மில் அமைக்கப்பட்டிருந்தது விபத்துக்குக் காரணமாக இருந்திருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, இளம்பெண்ணின் உயிரிழப்புக்கு ஜிம் நிர்வாகத்தின் அலட்சியமே காரணமாக இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், உடற்பயிற்சிக் கூடத்தின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் வைரலாகி வரும் நிலையில், இந்தச் சம்பவம் உடற்பயிற்சிக் கூடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வளவு முக்கியம் என்பதையும் மீண்டும் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளது. இருப்பினும், விபத்துக்கான முழுமையான காரணமும் நிர்வாகத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் விசாரணைக்குப் பிறகே உறுதியாகும்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author