4 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு புறப்படுகிறார் பிரதமர் மோடி – ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்!

Estimated read time 0 min read

பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு செல்கிறார்.

தனது பயணத்தின் முதல் கட்டமாக உஸ்பெகிஸ்தான் செல்லும் பிரதமர், அந்நாட்டு அதிபருடன் வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

தொடர்ந்து கிர்கிஸ்தான் செல்லும் அவர், பிஸ்கேக் நகரில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் ஒன்று ஆகிய தேதிகளில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார். இம்மாநாட்டில் பிராந்திய பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

You May Also Like

More From Author