இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு கட்டமைப்பில் ஒரு முக்கியமான நடவடிக்கையாக, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) முன்னாள் தலைமை இயக்குநரும், மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான அனிஷ் தயால் சிங், துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக (Deputy NSA) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) அன்று இந்த நியமனத்தை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் தோவல் தலைமையிலான உயர்மட்டக் குழுவில் இவர் இணைவார்.
மணிப்பூர் பிரிவைச் சேர்ந்த 1988 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அனிஷ் தயால் சிங், 35 ஆண்டுகளுக்கும் மேலான தனது சேவைக்குப் பிறகு 2024 டிசம்பரில் ஓய்வு பெற்றார்.
அனிஷ் தயால் சிங் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம்
