இலங்கையில் உலக டைய்ஜி தினம்

இலங்கைக்கான சீனத் தூதரகம், இலங்கை இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து, இலங்கையின் தலைநகர் கொழும்பில், 26ஆம் நாள் உலக டைய்ஜி தினம் எனும் நடவடிக்கையை நடத்தின. இலங்கையின் உடற்பயிற்சி சிக்குங் சங்கம், இலங்கையின் வூசு சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 200 டைய்ஜி ரசிகர்கள் இதில் கலந்துகொண்டனர்.

அந்நாட்டிற்கான சீன தூதர் ச்சிசென்ஹாங் இதன் துவக்க விழாவில் உரைநிகழ்த்தினார்.

இந்நடவடிக்கையின் மூலம், இரு நாடுகளின் விளையாட்டு மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றம் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதோடு, இரு நாடுகளின் மக்களின் நட்புறவும் வலுப்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

You May Also Like

More From Author