நெல்லை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 22ம் தேதி அன்று தமிழகம் வரவிருக்கிறார். அவர் நெல்லையில் நடைபெற உள்ள பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
இந்த மாநாடு முதலில் நாளை (ஆகஸ்ட் 17-ஆம் தேதி) நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் பாஜக மூத்த தலைவர் இல.கணேசனின் மறைவு காரணமாக ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வருகின்ற 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த மாநாட்டில் தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அமித் ஷா இனி அடிக்கடி தமிழகம் வருவார் என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னதாக தெரிவித்திருந்தார். இது தமிழகத்தில் பாஜகவின் தேர்தல் முன்னோட்டதை மேலும் தீவிரப்படுத்துவதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.