சீனாவில் உயர் தொழில்நுட்ப ஆக்கத் தொழில் நிறுவனங்களின் இலாபம் அதிகரிப்பு

சீனத் தேசிய புள்ளிவிபரப் பணியகம் நவம்பர் 27ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் பத்து மாதங்களில், சீனாவில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் மொத்த இலாபத் தொகை 6இலட்சத்து 73ஆயிரத்து 736கோடி யுவானாக இருந்தது. இது, கடந்த ஆண்டில் அதே காலத்தில் இருந்ததை விட 16விழுக்காடு அதிகரித்து காணப்பட்டது.

மேலும், இலாப அதிகரிப்புக்கு மின்னணு தொழிலானது முக்கிய பங்காற்றியுள்ளது. செயற்கை நுண்ணறிவு கணினி ஆற்றலுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவது. சேமிப்பு சில்லுகள் மற்றும் அதுடன் தொடர்புடைய தயாரிப்புகள் போன்ற தொழில்களின் இலாபம் தொடர்ச்சியான அதிகரிப்பை வழிவகுத்துள்ளது.

தவிர, இவ்வாண்டின் முதல் பத்து மாதங்களில், ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய உயர் தொழில்நுட்ப ஆக்கத் தொழில் நிறுவனங்களின் இலாபம், கடந்த ஆண்டில் இருந்ததை விட 50.9விழுக்காடு அதிகரித்து காணப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author