மனித உரிமைகளுக்கு மதிப்பு மற்றும் உத்தரவாதம் அளிப்பது பற்றிய ஷிச்சின்பிங்கின் கருத்து தொகுப்பு எனும் புத்தகம் தொடர்பான கருத்தரங்கு நவம்பர் 26ஆம் நாள் தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்கில் நடைபெற்றது. சீன மனித உரிமைகள் ஆய்வுக் கழகம், தாய்லாந்திற்கான சீனத் தூதரகம், சீனச் சர்வதேசத் தொடர்புகள் குழுமம், தாய்லாந்து-சீனக் கலாசார மற்றும் உறவுகள் கவுன்சில், ஆசிய-பசிபிக் சிந்தனைக் கிடங்கு ஆகியவை கூட்டாக நடத்திய இக்கருத்தரங்கில் இருநாடுகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட நிபுணர்களும் அறிஞர்களும் கலந்து கொண்டு, மக்களின் இன்பமான வாழ்க்கையே மிகப்பெரிய மனித உரிமை என்ற தலைப்பில் விவாதம் நடத்தி கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
தாய்லாந்து-சீனக் கலாசார மற்றும் உறவுகள் கவுன்சின் தலைவர் உரை நிகழ்த்துகையில், சீனாவின் மனித உரிமைகள் இலட்சியம் உலகளவில் கவனத்தை ஈர்க்கும் சாதனைகளைப் பெற்றுள்ளது என்றார். மேலும், மனித உரிமைகளுக்கு மதிப்பு மற்றும் உத்தரவாதம் அளிப்பது பற்றிய ஷிச்சின்பிங்கின் கருத்து தொகுப்பு எனும் புத்தகத்தின் தாய்லாந்து மொழி பதிப்பின் வெளியீடானது, சீன ஆட்சிமுறையிலுள்ள ஞானம் பற்றி தாய்லாந்து வாசகர்கள் ஆழமாக அறிந்து கொள்ள உதவும் அதேவேளை, இருநாட்டு மக்களிடையிலான பரஸ்பரப் புரிதலையும் மேம்படுத்தும் என்று கூறினார்.
