இந்திய விமானப்படை சாதனை: ஏர் வைஸ் மார்ஷலாக பதவியேற்ற முதல் பெண் அதிகாரி சக்தி சர்மா  

Estimated read time 0 min read

இந்தியப் பாதுகாப்புப் படைகளின் வரலாற்றில் புதிய மைல்கல்லாக, மருத்துவத் துறை சாராத பிரிவிலிருந்து ஏர் வைஸ் மார்ஷல் (இரண்டு நட்சத்திர அந்தஸ்து) பதவிக்கு உயர்ந்துள்ள முதல் பெண் அதிகாரி என்ற மாபெரும் சாதனையை ஏர் வைஸ் மார்ஷல் சக்தி சர்மா படைத்துள்ளார்.
இவர் விமானப்படைத் தலைமையகத்தில் கல்விப் பிரிவின் உதவித் தலைமைத் தளபதியாகச் செப்டம்பர் 1 பொறுப்பேற்றுக்கொண்டார்.
1994ஆம் ஆண்டு இந்திய விமானப்படையின் கல்விப் பிரிவில் இணைந்த சக்தி, பயிற்சி மையங்கள், கள நிலையங்கள் மற்றும் கட்டளைத் தலைமையகங்களில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறப்பான சேவையாற்றியுள்ளார்.
ஐஐடி கான்பூர் மற்றும் புனே பல்கலைக்கழகங்களில் பாதுகாப்புத் துறை சார்ந்த ஆராய்ச்சிகளுக்காக விமானப்படையின் சிறப்பு இருக்கைகளை அமைப்பதில் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

You May Also Like

More From Author