தமிழகம் முழுவதும் ஒப்பந்தம், பொது அதிகாரம் உள்ளிட்டவற்றுக்கான முத்திரைக் கட்டணத்தை பத்திரப்பதிவுத்துறை பல மடங்காக உயர்த்தியுள்ளது.
கடந்தாண்டு தமிழக சட்டப்பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அடிப்படையாக கொண்டு முன்மொழியப்பட்ட சட்டமுன்வடிவு அடிப்படையில், பிரமாணப்பத்திரம், ஒப்பந்தம், பொது அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கான முத்திரைக் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
மேலும் இந்திய முத்திரைச் சட்டத்திலும் திருத்தங்கள் செயப்பட்டுள்ளதாகவும், இந்த திருத்தங்கள் கடந்த மே 3 முதல்அமலுக்கு வந்துள்ளது எனவும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கைப்படி, தத்தெடுத்தலுக்கு முன்பிருந்த ரூ.100 முத்திரைக் கட்டணமானது ரூ.1000ஆகவும், பிரமாணப்பத்திரம், உடன்படிக்கை ஆகியவற்றுக்கு முத்திரைக் கட்டணம் ரூ.20 என்பது ரூ.200ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சங்கம் பதிவுக்கான முத்திரைக் கட்டணம் ரூ.300 லிருந்துஒவ்வொரு ரூ.10 லட்சத்துக்கும் ரூ.500 என்று ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.